முன்யோசனைகள் இன்றி அறிவித்து பின்வாங்குவது முதலமைச்சர் பழனிசாமி அரசின் வழக்கமாகிவிட்டது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 16-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.ஆனால் அரசின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதுகுறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், 50%-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பிள்ளைகளை திறக்க வேண்டாம் என தெரிவித்தனர். இதனையடுத்து, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்படுவதாகவும், பள்ளிகள் திறப்பு தேதி குறித்து, சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,பள்ளிகள் திறப்பு – ஒத்திவைப்பு குழப்பங்கள் அரசின் ஊசலாட்ட மனநிலையைக் காட்டுகிறது.முன்யோசனைகள் இன்றி அறிவித்து பின்வாங்குவது முதலமைச்சர் பழனிசாமி அரசின் வழக்கமாகிவிட்டது. கொரோனாவை விட இந்த குழப்பவாதிகளின் அறிவிப்புகளே அதிக பீதியூட்டுகின்றன. மக்களை மேலும் மேலும் குழப்பாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…