1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு..! அக்.12-ல் ஆலோசனை..!
அக்.12-ல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து, செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், நவ.1-ஆம் தேதி முதல் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து, அக்.12-ஆம் தேதி ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.