பள்ளிகள் திறப்பு: நாளை பெற்றோர்களிடம் கருத்து கேட்பு.!
தமிழகம் முழுதும் பள்ளிகளை திறக்கலாமா…வேண்டாமா.? என்று நாளை கருத்து கேட்பு நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் நவம்பர் 16-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், அதிலும் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே நாளை கருத்து கேட்பு கூட்டம் நடத்த முடிவு செய்தனர்.
அந்த வகையில், அரசு பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் பள்ளிகள் திறப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும். அது மட்டுமின்றி பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களின் கருத்தும் கேட்ட பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று இன்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.
இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள கருத்து கேட்பில், பெற்றோர் மட்டுமே பங்கேற்க வேண்டும். பெற்றோர் இல்லாத நிலையில், காப்பாளர் அல்லது உறவினர்கள் பங்கேற்க வழங்கப்பட்டுள்ளது.