செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில்,செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும்,சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இது தொடர்பாக அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
” தனியார் பள்ளிகளில் இருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசுப் பள்ளிகளை தேடி வந்துள்ளனர்.எனவே,இடைநிற்றல் இல்லாமல் அவர்களை எப்படியெல்லாம் தக்க வைத்து கொள்ள வேண்டும் என்று சிந்தித்து செயல்பட்டுக் கொண்டு வருகிறோம்.
இந்த கொரோனா காலத்தில் சில பெற்றோர்கள் தாங்கள் செய்யும் வேலைக்கு குழந்தைகளை கூட்டி செல்வதாகவோ, அல்லது வேலைக்கு அனுப்புவதாகவோ தெரியப்பட்டால்,உடனடியாக அதற்கான லேபர் துறையிடம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”,என்று தெரிவித்தார்.
இதனையடுத்து திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படுமா? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்:
“செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் கண்டிப்பாக திறக்கப்படலாம் என்று முதல்வர் கூறியுள்ளார்.அதற்கு நாங்கள் தயார் நிலையில் உள்ளோம்.1 ஆம் தேதியன்று உள்ள சூழல் பொருத்து,பள்ளிகள் திறக்கப்படும்.
ஏனெனில்,கிட்டத்தட்ட 14 மாநிலங்களில் உள்ள 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறுகின்றன.சில இடங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கும் ,சில இடங்களில் 12 ஆம் வகுப்புக்கு மட்டும் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதை கருத்தில் கொண்டு சுழற்சி முறையில் தமிழகத்திலும் பள்ளிகளை தொடங்கலாம்.
அதன்படி,முதல்நாளில் 20 மாணவர்கள்,மறுநாளில் மீதமுள்ள 20 மாணவர்கள் என வகுப்பிற்கு வரவைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.பள்ளிகள் திறப்பதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகள் 2 நாட்களில் வெளியிடப்படும்.
இதற்காக ஆசிரியர்கள் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டுள்ளனர். மேலும், தடுப்பூசி போடாத ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும்,நீட் பொறுத்தவரையில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் கருத்தாக உள்ளது.அதற்காக தான் 5 வருடங்களாக போராடி வருகிறோம்”,என்று தெரிவித்தார்.
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…
சென்னை : மெட்ரோ நிர்வாகம் தற்போது, இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோஇரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ரூ.3,657.53 கோடி…
கிறிஸ்மஸ் தாத்தா உருவான வரலாறு, கிறிஸ்மஸ் ட்ரீ வைக்க காரணம் மற்றும் வீட்டில் ஸ்டார் வைப்பது எதற்காக என்றும் இந்த…