#Breaking:கனமழை:விழுப்புரம்,கன்னியாக்குமரி மாவட்டத்திலும் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
தமிழகம்:கனமழை காரணமாக கீழ்கண்ட மாவட்டங்களில் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும்,கன்னியாக்குமரி மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதன் காரணமாக தமிழகத்தில் 28 ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல மாவட்டங்களில் கனமழை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால்,பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல்,விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.அதைப்போல,கன்னியாக்குமரி மாவட்டத்தில் பள்ளிகள்,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,தற்போது 13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும்,7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.