#BreakingNews : 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை -புதுச்சேரி அரசு அறிவிப்பு
நிவர் புயல் எதிரொலியாக புதுச்சேரியில் நாளை (26/11/2020) முதல் நவம்பர் 28 வரை 3 நாட்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிவர் புயல் கடலூருக்கு தென்கிழக்கே 290 கி.மீ. தொலைவில் உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை நாளை முதல் நவம்பர் 28-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.