#BREAKING: மிக்ஜாம் புயலால் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், ஒருசில நாட்களில் புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் (Michaung) என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 3-ஆம் தேதி புயலாக வலுப்பெற்று 4-ஆம் தேதி மாலை கரையை கடக்கும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகும் புயல் 5-ம் தேதி முற்பகலில் ஆந்திராவின் நெல்லூர் – மசூலிபட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், புயல் எச்சரிக்கையால் புதுச்சேரியில் வரும் 4-ம் தேதி திங்கள்கிழமை பள்ளி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் மாவட்ட பள்ளிகளுக்கு டிசம்பர் 4-ம் தேதி விடுமுறை என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025