9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் செயல்படும் – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறாத போதும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி டிச.27-ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அடுத்த இரண்டு நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் நாளை 3-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனிடையே கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்த முதல்வர், 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜனவரி 10 வரை பள்ளிகள் செயல்பட தடை விதித்தார்.

இதனால் 9 முதல் 12 -ஆம் வகுப்பு வழியிலான மாணவர்களுக்கு மட்டும் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில், கொரோனா பரவலுக்கு மத்தியில், 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழக்கம் போல் நாளை முதல் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜன.10 வரை விடுமுறை நீட்டிக்கப்டுகிறது என்றும் ஜன.10ம் தேதி வரை 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவர்களுக்கான இல்லம் தேடி கல்வி திட்டம் தொடரும் என முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதனிடையே, தமிழகத்தில் 10,11,12-ம் வகுப்பு மாணவர்கள் 33 லட்சம் பேருக்கு நாளை முதல் பள்ளிகளில் நேரடியாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். இதற்கு அனைத்து பள்ளி நிர்வாகங்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பள்ளிகல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

16 minutes ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

20 minutes ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

57 minutes ago

இடைத்தேர்தல்: கேரளாவில் இரட்டை வெற்றியை காணும் காங்கிரஸ்!

கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…

1 hour ago

கர்நாடகா இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி! 3 தொகுதிகளையும் கைப்பற்றி அசத்தல்!

கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…

1 hour ago

வயநாட்டில் வரலாற்று வெற்றி? ராகுல் காந்தி சாதனையை முறியடித்த பிரியங்கா காந்தி!

வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…

2 hours ago