முடிந்தது விடுமுறை -நாளை தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு
- அரையாண்டுத் தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
- விடுமுறை நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.
அரையாண்டுத் தேர்வுகள் அனைத்துப் பள்ளிகளிலும் முடிந்த நிலையில் ஜனவரி 1 ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறை முடிந்த பின்பு ஜனவரி 2 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் தமிழகத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.எனவே தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 2 ஆம் தேதிக்கு பதிலாக 3ஆம் தேதி திறக்கப்படும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.பின்னர் ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து 3ஆம் தேதி திறக்கப்படும் என்று இருந்த நிலையில் 4ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.ஆனால் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் 2 நாட்களாக நடைபெற்றது .எனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து ஜனவரி 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.இதனையடுத்து நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.