தமிழகத்தில் இன்று முதல் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஒரு வருட காலமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்து. ஆகவே பள்ளிகள் திறப்பது குறித்து பல கட்டமாக ஆலோசனைகள் நடைபெற்று வந்தது. பொது தேர்வு நடைபெற இருப்பதை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வந்த நிலையில், அண்மையில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி ,வீட்டில் ஆன்லைன் மூலம் படிக்க விரும்பும் மாணவர்களை அனுமதிக்க வேண்டும். பள்ளிக்கு மாணவர்கள் வர வேண்டும் என்று கட்டாயப்படுத்த கூடாது எனவும், பெற்றோர்களின் விருப்பப்படி ,ஒப்புதல் கடிதம் பெற்ற மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் எனவும் பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் ஆகியவற்றை எப்பொழுதம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் போன்ற பாதுகாப்பு வழிகாட்டுதலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…