அரையாண்டுத் தேர்வுகள் அனைத்துப் பள்ளிகளிலும் முடிந்த நிலையில் ஜனவரி 1 ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறை முடிந்த பின்பு ஜனவரி 2 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் தமிழகத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.எனவே தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 2 ஆம் தேதிக்கு பதிலாக 3ஆம் தேதி திறக்கப்படும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனால் இதற்கு இடையில், ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது .அந்த கோரிக்கையில் ,தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணி ஜனவரி 2 -ஆம் தேதி நள்ளிரவு வரை நடைபெற வாய்ப்பு உள்ளதால் பள்ளிகளை ஜனவரி 3ஆம் தேதிக்கு பதிலாக ஒருநாள் தள்ளிவைத்து ஜனவரி 4 -ஆம் தேதி திறந்திட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது .
இதற்கு ஏற்றவாறு பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது.அந்த அறிவிப்பில், 3ஆம் தேதி திறக்கப்படும் என்று இருந்த நிலையில் 4ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.ஆனால் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை நேற்றும் நடைபெற்றது .எனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து ஜனவரி 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…