மிக்ஜாம் புயல் மீட்பு நடவடிக்கை – நாளையும் இந்தந்த மாவட்டங்களில் விடுமுறை!
மிக்ஜாம் புயல் மீட்பு நடவடிக்கை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் புயல் சென்னையை விட்டு விலகி சென்ற நிலையில், மழையின் தீவிரம் குறைந்து, தற்போது மழை நின்றுள்ளது.
அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
இதையடுத்து, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் வெள்ளநீர் ஒரு சில இடங்களில் வடிந்த நிலையில், பல இடங்களில் இன்னும் வடியாமல் உள்ளது. அதனால், வெள்ள நீரை அகற்றும் பணி, புயலால் விழுந்த மரங்களை அகற்றும் பணி உள்ளிட்டவகைகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் புயல் மீட்பு நடவடிக்கை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயலால் இன்னும் பல இடங்களில் மழை நீர் வடியாத நிலையில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, புயல் மற்றும் கனமழை காரணமாக 2 நாட்கள் இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது, புயல் பாதிப்பு காரணமாக மூன்றாவது நாளாக நாளையும் விடுமுறையை அறிவித்தது தமிழக அரசு. தாழ்வான இடங்களில் மழைநீர் வடியாததால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.