School Reopen [Image Source : Twitter/News18]
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள் கடந்த 4-ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்தன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கி நின்ற மழை வெள்ளம் தற்போது வடிந்து வருவதால் ஒரு வார விடுமுறைக்கு பிறகு பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்படுகின்றன. டிசம்பர் 4-ஆம் தேதி முதல் நேற்று வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு ஏழு நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏழு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இந்த நான்கு மாவட்டங்களிலும் உள்ள பள்ளி கல்லூரிகள் இன்று திறக்கப்படுகின்றன.
பள்ளி கல்லூரிகள் இன்று திறக்கப்படும் நிலையில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க ஏற்கனவே அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முறையில் அனைத்து நடவடிக்களையும் மேற்கொள்ளும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழையால் 4 மாவட்டங்களிலும் டிசம்பர் 4 முதல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
சென்னை, காஞ்சிபுரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட நான்கு மாவட்டங்களில் பள்ளிகளை தூய்மைப்படுத்த 1.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு தலா 50 லட்சமும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை சீரமைக்க ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…