அதிகனமழை எச்சரிக்கை! விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை 29 தேதி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

விழுப்புரம் : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடலோரப்பகுதிகளில், காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே 30-ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அது மட்டுமின்றி, நாளை (29.11.2024) விழுப்புரம் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழைக்கு வாய்ப்பு இருப்பதால் ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கனமழை தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் அதனை கருத்தில்கொண்டு நாளை (நவம்பர் 29.11.2024) விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சி.பழனி.,இ.ஆ.பஉத்தரவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025