பள்ளி மாணவி தற்கொலை முயற்சி: போக்சோவில் ஆசிரியர் கைது..!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அப்பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால், மனஉளைச்சலில் இருந்து வந்த மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதில், காயமடைந்த மாணவி தற்போது மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார். மாணவி அளித்த புகாரின் பேரில் ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆசிரியர் தனக்கு தகாத செய்திகளை அனுப்புவதாகவும், பள்ளியில் அவருடன் நேரத்தை செலவிடுமாறு கூறியதாக மாணவி புகார் அளித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025