சாஃப்டர் பள்ளிச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியான 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு நெல்லை திருமண்டலம் ரூ.3 லட்சம் நிதியுதவி.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலை பள்ளியில் உள்ள கட்டிடத்தில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், மேலும் 4 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விபத்து தொடர்பாக அப்பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட மூவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த துயரச் சம்பவத்தை அறிந்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்த நான்கு மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட உத்தரவிட்டார்.
இந்த நிலையில், நெல்லை சாஃப்டர் பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்த விவகாரத்தில் நெல்லை திருமண்டல திருச்சபை சார்பில் இறந்துப்போன மாணவர்களுக்கு ரூபாய் 3 லட்சமும், காயமடைந்த மாணவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரமும் குடும்பத்தினரை சந்தித்து விரைவில் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…
சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…
சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…