பள்ளி மாணவர்கள் மோதல்..!வினோதமான தண்டனை கொடுத்த காவல் ஆய்வாளர்..!
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் ஒரு மாணவருக்கு பிறந்த நாள் என்பதால் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் கேக் வெட்டி கொண்டாடினர்.அப்போது அங்கு வந்த பாளையங்கோட்டை மற்றொரு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் கைகலப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து அங்கு இருந்து இரண்டு பள்ளி மாணவர்களும் சென்று விட்டனர்.பின்னர் நேற்று முன்தினம் ஒரு பள்ளி மாணவர்கள் மற்றோரு பள்ளி மாணவர்களை தாக்க பயங்கரமான ஆயுதங்களுடன் சென்று உள்ளனர்.இதை அறிந்த பாளையங்கோட்டை போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றனர்.
பின்னர் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.அதில் நடந்ததை மாணவர்கள் கூறினர்.இரண்டு பள்ளி மாணவர்கள் 49 பேரை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.அங்கு அவர்களை சமாதானப்படுத்தினர்.
பிறகு மாணவர்களிடம் பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் தில்லை நாகராஜன் கூறுகையில் ,உங்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்கவேண்டும் என்றால் 1330 திருக்குறளை எழுதி தருமாறு கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் மாணவர்கள் திருக்குறளை எழுதி தரவில்லை.இந்நிலையில் நேற்று திருக்குறளை எழுதி கொடுத்தால் தான் பள்ளிக்கு அனுப்புவேன் என கூறியுள்ளார்.அதன் பின்னர் மாணவர்கள் அனைவரும் காவல் நிலையத்தின் முன் அமர்ந்து 1330 திருக்குறளை எழுதி கொடுத்தனர்.