கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை, ஆர்எஸ் புரம் அனைத்து மகளீர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு வரை படித்திருந்தார். இதனை அடுத்து இவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு, கடிதம் எழுதி வைத்துவிட்டு, ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து, மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீஸ் விசாரணையில், மாணவிக்கு அவர் பயின்ற பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர் மூலம், பாலியல் தொந்தரவு இருந்தது தெரிய வந்தது. இந்நிலையில், போலீசார் அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
அதனை தொடர்ந்து அப்பள்ளி முதல்வர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக இருந்த மீரா ஜாக்சனை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்தது. சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன், பெங்களூரில், தலைமறைவாக இருந்த நிலையில், மீரா ஜாக்சனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், கோவை மாணவி தற்கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை, ஆர்எஸ் புரம் அனைத்து மகளீர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…
உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…