அக்.,திறக்கிறதா?? தனியார் பள்ளிகள்!

Default Image

பள்ளிகளை அக்டோபரில் திறப்பு குறித்து தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த ராம்கோ நிறுவனத்தின் உறுப்பு நிறுவனமான பேரன்ட் சர்க்கிள் நிறுவனம் பள்ளி முதல்வர்களை எல்லாம் ஒருங்கிணைத்து ஆன்லைன் மூலமாக ஆலோசனை மற்றும் கருத்துக்கேட்பு கூட்டம்  ஒன்றினை நடத்தியது.

இந்த கூட்டத்தில் சென்னை, மும்பை மற்றும் டில்லியில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் ஒட்டுமொத்த பேரும் பங்கேற்று உரையாற்றினர்.அதில் பேசிய நிர்வாகிகள் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளை தற்போது திறக்க முடியாது அத்தகைய சூழல் நிலவி வருகிறது.

மேலும்  தென்மேற்கு பருவமழையால் வைரஸ் பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.வகுப்புகளில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது என்பது பள்ளிகளில் சவாலான பணியாகும். குறிப்பாக ‘பிளே ஸ்கூல், ப்ரீ ஸ்கூல், பிரைமரி ஸ்கூல்’ என இரண்டரை வயது முதல் 10 வயது வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளை  தற்போது நடத்த முடியாது.

இந்நிலையில் இக்காலக்கட்டத்தில் பாடதிட்டங்கள் பாடங்களின் அளவுகள் குறைக்க வேண்டும். கூடுதல் வகுப்பறை கட்டடங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.கொரோனாவுக்கு பின்பு ஏற்படக்கூடிய நிலைக்கான விதிகளை இப்போதே வகுக்க வேண்டும். கல்வி ஆண்டின் காலத்தை மாற்றி அமைக்க வேண்டும். எனவே இதுபோன்ற காரணங்களால் அக்டோபர் வரை பள்ளிகளை திறப்பது என்பது சாத்தியம் இல்லை என்று கூட்டத்தில் ஒரு மனதாக தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்