தமிழகம் முழுவதும் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை.!
தமிழகம் முழுவதும் 5 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வந்தது. சமீபத்திய கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நநடைபெற்று வந்த அரையாண்டுத் தேர்வு இன்றுடன் நிறைவு பெறுவதால், நாளை முதல் ஜனவரி 1 வரை விடுமுறை விடப்படுகிறது.
அதன்படி, அரையாண்டு தேர்வுகள் இன்றுடன் முடிவடைவதை தொடர்ந்து, நாளை முதல் ஜனவரி 1ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவித்தும், ஜனவரி 2ம் தேதி மீண்டும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஆனால், கனமழை வெள்ளம் காரணமாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலும் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, பள்ளிகளுக்கு ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், ஜனவரி 2ம் தேதி பள்ளி திறந்த பிறகு, அரையாண்டுத் தேர்வு நடைபெறும் எனவும் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, மழை வெள்ள பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (டிச.22) 5வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளித்தும், 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.39 குறைவு..!
மேலும், நெல்லை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவித்தும், இந்த விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.