பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை..! சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து, சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
பள்ளி மாணவி ஒருவருக்கு தாஸ் என்பவர் கத்தி முனையில், பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், மாணவியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். கடந்த 2021-ஆம் நடந்த இந்த சபாவத்தில் தாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை போக்ஸோ சிறப்பு நிதீமன்றத்தில் நீதிபதி ராஜலக்ஷ்மி தலைமையில் இந்த வழக்கில் மீதான விசாரணை நடைபெற்றது. அதில் தாஸின் மீதான குற்றம் நிருபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்ஸ் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடாக ரூபாய் 7 லட்சம் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.