28 ஆண்டுக்கு பின் சந்தித்த பள்ளி நண்பர்கள்…!!
பள்ளி பருவத்தில் படித்த நண்பர்கள் சமூக வலைதளத்தின் மூலம் சந்தித்துக்கொண்டனர்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நேரு நகர் பகுதியில் இருக்கும் சர்வைட் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற பாலமுரளி என்பவர் தன்னுடைய 4ம் வகுப்பில் தன்னுடன் படித்த மாணவர்கள், ஆசிரியர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை 5 மாதத்திற்கு முன்பு தன்னுடைய முகநூலில் பதிவிட்டார்.
இந்த போட்டோவை பார்த்த அவருடைய சக நண்பர்கள் போனில் தொடர்பு கொண்டு பேசி படித்த முன்னாள் நண்பர்கள் அனைவரும் குடும்பத்துடன் சந்தித்துக்கொள்ள முடிவு எடுத்தனர். இந்நிலையில் தனியார் மண்டபம் ஒன்றில் 28ஆடுகளுக்கு முன்பு படித்த 45 பேரும் ஒன்று கூடினர்.அரசு ஊழியர், தொழிலதிபர், அரசியல் பிரமுகர் என பல்வேறு நிலைகளில் உள்ள இவர்கள், தங்கள் பழைய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர்.