படத்தை பார்த்துக்கொண்டு வீணாக பொழுதுபோக்க வேண்டாம்.! அமைச்சர் அம்பில் மகேஷ் அட்வைஸ்.!
இன்று குன்னூரில் மாணவர்கள் மத்தியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உரையாற்றினார்.
இன்று நீலகிரி மாவட்டம் குன்னூரில் மாணவ்கரலுக்கான பயிற்சி கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். அத விழாவில் பேசிய அன்பில் மகேஷ், மாணவர்கள் தங்கள் நேரத்தை திரைப்படம் பார்த்து கழிக்க கூடாது என வலியுறுத்தினார்.
மேலும், மாணவர்கள் தங்கல் நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட்டு புதிது புதிதான விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, பெரியார் பற்றிய ஒரு சுவாரஷ்ய நிகழ்வை பற்றியும் குறிப்பிட்டார்.
பெரியாருக்கு 86 வயது இருக்கும் போது, அருகில் உள்ள பள்ளி கட்டடத்தில் புதியதாக கம்ப்யூட்டர் வந்திருப்பதை அறிந்தார். அப்போது, அதனை தான் அறிய வேண்டும் கேட்டுள்ளார். உடனே நாற்காலியில் பெரியாரை தூக்கி கொண்டு கணினியை காண்பித்தார்கள். அந்த வயதில் கூட புதிய ஒரு விஷயத்தை தான் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்வமாக இருந்தவர் பெரியார் என அமைச்சர் அன்பில் மகேஷ் குறிப்பிட்டு பேசினார். மேலும் மாணவர்கள் மத்தியில் பறை இசை இசைத்து மகிழ்ந்தார்.