தமிழகத்தில் மோசமான நிலையில் உள்ள பள்ளி கட்டடங்கள் – வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்…!
தமிழகத்தில் மோசமான நிலையில் உள்ள பள்ளிக்கட்டடங்கள் தொடர்பான வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை.
மதுரை உயர்நீதிமன்ற கிளையில், மதுரையை சேர்ந்த செந்தில் முருகன் என்பவர் தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலை பள்ளி, மேல்நிலைப்பள்ளி, அங்காடி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
இதில் அதிகமான பள்ளி கட்டங்கள் 40 ஆண்டுகளுக்கும் முன்கூட்டியே கட்டப்பட்ட கட்டிடங்களாக உள்ளது. இதனால் பல பள்ளி கட்டிடங்கள் மோசமான நிலையில், இடிந்து விழும் நிலையில் உள்ளது.
மதுரை, கோவை, திருநெல்வேலி, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கட்டிடங்கள் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதனால், புதிய கட்டிடங்கள் கட்ட அரசு உத்தரவிட வேண்டும் என் அவர் தாக்கல் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பதாக விசாரணைக் வந்தது. பள்ளி கல்வித்துறை சார்பில் பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்துள்ளனர்.