பள்ளி, கல்லூரி விடுமுறை : சூழலுக்கேற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுக்கலாம் – தமிழக அரசு

பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பது தொடர்பாக, அந்தந்த மாவட்டங்களில் நிலவும் சூழலுக்கேற்ப மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் மிக கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாக்குமரி,நெல்லை,தூத்துக்குடி,தென்காசி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
இதற்கிடையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தததால் சாலைகளில் வெள்ளம் தேங்கியதுடன், வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்தது இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த 4 மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு, 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்தார்.
இந்நிலையில், தற்போது, பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பது தொடர்பாக, அந்தந்த மாவட்டங்களில் நிலவும் சூழலுக்கேற்ப மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025