பள்ளி கல்லூரி விடுமுறை அப்டேட் : விழுப்புரம், புதுச்சேரி, கடலூர்..
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை எனவும், கடலூரில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் எனவும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை : ஃபெஞ்சல் புயலின் தாக்கம் தற்போது தான் வடதமிழக மாவட்டங்களில் சற்று மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இன்னும் பல்வேறு இடங்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்குவது குறித்த தகவல்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து வருகின்றனர்.
விழுப்புரம் :
புயலின் தாக்கம் குறையாத காரணத்தால், விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் இன்றும் (டிசம்பர் 5) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் நேற்றே உத்தரவு பிறப்பித்துள்ளார். ஃபெஞ்சல் புயல் காரணமாக தொடர்ந்து 5வது நாளாக விடுமுறை அறிவித்துள்ளார் அம்மாவட்ட ஆட்சியர் பழனி.
கடலூர் :
கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பள்ளி கல்லூரிகள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், 3 நாட்களுக்கு பிறகு இன்று (டிசம்பர் 5) பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி :
அடுத்து, ஃபெஞ்சல் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி மாநிலத்தில் 17 பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்பட்டு வருவதால், அந்த பள்ளிகளை தவிர்த்து மற்ற பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்தள்ளார். நேற்று முதலே மற்ற பள்ளி கல்லூரிகள் புதுச்சேரியில் வழக்கம் போல இயங்க ஆரம்பித்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள பள்ளிகள் விவரம் :
- அரசு தொடக்கப் பல்லி, தவளக்குப்பம்.
- அரசு தொடக்கப் பள்வி, காக்காயன்தோப்பு.
- அரசு தொடக்கப் பள்ளி, அனிச்சம்பேட்
- அரசு தொடக்கப் பள்ளி, கரையாம்புத்தூர்.
- அரசு தொடக்கப் பள்ளி, சின்னகரையாம்புத்தூர்.
- அரசு தொடக்கப் பள்னி, கடுவனூர்.
- அரசு தொடக்கப் பள்ளி, கிருஷ்ணாவரம்.
- அரசு தொடக்கப் பள்ளி, மணமேடு.
- அரசு பெண்கள் தொடக்கப் பள்ளி, திருக்கனூர்.
- அரசு தொடக்கப் பள்ளி, செட்டிபட்டு.
- அரசு நடுநிலைப் பள்ளி, பண்டசோழநல்லூர்.
- அரசு நடுநிலைப் பள்னி, பூரணாங்குப்பம்.
- அரசு நடுநிலைப் பள்ளி, டி. என். பாளையம்,
- அரசு நடுநிலைப் பள்ளி, பனையடிக்குப்பம்.
- அரசு உயர்நிலைப் பள்ளி, பனிந்திட்டு.
- அரசு தொடக்கப் பள்ளி, நத்தமேடு.
- பாகூர் கொம்யூனில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள்,