கிராமப்புறங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட சில வகுப்புகளை சேர்ந்த மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் பொருட்டு அவர்களின் பெற்றோர்களது ஆண்டு வருமான உச்ச வரம்பினை 1 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலனைச் சேர்ந்த 3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை கிராமப்புறங்களில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு அவர்களின் பெற்றோர்களது ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.72,000/- லிருந்து ரூ.1,00,000/- ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முன்னதாக நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் “கிராமப்புறத்தைச் சார்ந்த பொருளாதாரத்தில் பின் தங்கிய மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவியர் அதிக எண்ணிக்கையில் பயனடையும் வகையில், கிராமப்புற மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள பெற்றோரது ஆண்டு வருமான உச்ச வரம்பு 72 ஆயிரம் ரூபாயிலிருந்து இலட்சம் 1 ரூபாயாக உயர்த்தப்படும்”என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில்,இதுதொடர்பான தற்போதைய மானியக் கோரிக்கை அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக பெறப்பட்ட மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையரின் கருத்துருவில், கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற 3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.72,000/- லிருந்து ரூ1,00,000/- ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…