திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் முன்பு காவல்துறை பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மகளிர் தினம் பிறப்பதற்கு சில மணி நேரம் முன்பாக உஷாவின் உயிர் பறிக்கப்பட்டது என்றால், மகளிர் தினம் நிறைவடைந்த மறுநாள் மாணவி அசுவினியின் உயிர் பறிக்கப்பட்டுள்ளதாக அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அசுவினி கொலைச் சம்பவம் போன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படும் சூழல் உருவாகாமல், உரிய நேரத்தில் கடும் நடவடிக்கைகளை எடுத்து, பிரச்னைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தின் பாதுகாப்பும், சட்டம் ஒழுங்கும் இன்றைக்கு மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனிடையே காவலர்கள் மத்தியில் பெருகி வரும் தற்கொலைகளை தடுக்க, குறை தீர்ப்பு முகாம்களை பயனுள்ள வகையில் நடத்திட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே திமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம், அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…