அதிகாரிகள் நினைத்தால் மட்டுமே திட்டங்கள் வளரும் – முதலமைச்சர்

Default Image

அரசு நிர்வாகம் என்பது நாம் அனைவரும் சேர்ந்து இழுக்கும் தேர் என்று 68 திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு.

தமிழ்நாடு அரசின் “முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்” குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.  அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கவனித்து பேணி பாதுகாத்தால் திட்டங்கள் வளரும். அதிகாரிகள் கவனிக்க தவறினால் திட்டங்கள் மடியும். கடந்த காலத்தில் புறக்கணிக்கப்பட்ட உழவர் சந்தைகள் உள்ளிட்ட திட்டங்கள் அதிகாரிகள் கையில்தான் உள்ளது. பெரும் நம்மை தரக்கூடிய திட்டங்களை அரைகுறையாக செயல்படுத்தினால் சிறு நன்மை கூட ஏற்படாது. திட்ட செயலாக்கத்துக்கு அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

cmtoday13

திட்டங்களை செயல்படுத்தும் போது துறைசார்ந்த வல்லுநர்களின் ஆலோசனைகளை முழுமையாக பெற வேண்டும். 2 மாதங்களில் மீண்டும் ஆய்வு மேற்கொண்டு மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் பல திட்டங்களில் முன்னேற்றம் காணப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் பொற்காலத்தை உருவாக்க அரசு செயல்பட்டு வருகிறது. திட்டங்கள் வகுக்கவும், நிறைவேற்ற வழிமுறைகளை கூறவும், துறைசார் வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. தாமதமாகி சுணங்கியுள்ள திட்டங்களை குறித்த காலத்துக்குள் நிறைவேற்றுமாறும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

MK STALIN TN CM

மேலும், தொடர்ச்சியான ஆய்வுகளால் தொய்வில்லாத நிர்வாகத்தை உருவாக்க முடியும். அரசு நிர்வாகம் என்பது நாம் அனைவரும் சேர்ந்து இழுக்கும் தேர். ஒரு திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை முழுமையாக செலவிட வேண்டும் என 13 துறைகள் தொடர்பாக நடைமுறையில் உள்ள 68 திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தலை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்