தமிழக காவல்துறை : 1.17 லட்சம் காவல் பணியாளர்களுக்கு 5000 ரூபாய் கொரோனா உதவித்தொகை, 44.46 கோடியில் புதிய காவல் நிலையங்கள் என பல்வேறு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்ட ஒழுங்கை பராமரிப்பதில் சிறப்பாக பங்காற்றிய தமிழக காவல்துறையினரை பாராட்டி, காவல்துறைக்காக செயல்படுத்திய பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அரசு அறிவிப்பில் குறிப்பிடுகையில், 1.17 லட்சம் காவல் பணியாளருக்கு ரூ.5,000 வீதம் ரூ.58.50 கோடி கொரோனா உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. ரூ.44.46 கோடியில் புதிய ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களுக்கு புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
மேலும் , 58 புதிய மகளிர் காவல் நிலையங்கள், 21 புதிய தீயணைப்பு மீட்புப் பணி நிலையங்கள், சிறைவாசிகள் பயன்பாட்டிற்கு 1 இலட்சம் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. தீவிபத்திலும் வெள்ளத்திலும் சிக்கிய 42,224 மனித உயிர்களும் ரூ.605 கோடி மதிப்புடைய உடைமைகளும் மீட்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்து திமுக ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இதுவரை தமிழக காவல்துறை சட்ட ஒழுங்கு பிரச்சனை இன்றி நடத்தி முடித்த நிகழ்வுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகிய நிகழ்வுகளை தமிழக காவல்துறை சிறப்பாக வழிநடத்தியது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்திட அனைத்து காவல் கோட்டங்களிலும் 39 புதிய மகளிர் காவல் நிலையங்களையும், கோயம்பேடு, கோட்டூர்புரம், புழல் உள்ளிட்ட 19 இடங்களில் புதிய மகளிர் காவல் நிலையங்களையும் தமிழக முதல்வர் உத்தரவின் பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக காவல்துறையில் மகளிர் காவலர்கள் நியமிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பொன்விழா ஆண்டு விழாவாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
481.92 கோடி ரூபாய் செலவில் 2,882 காவல்துறை வாடகை குடியிருப்புகள், 42.88 கோடி ரூபாய் செலவில் 42 காவல் நிலையங்கள், 84.53 கோடி ரூபாய் செலவில் 14 புதிய காவல் துறை கட்டிடங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை சார்பாக 2.80 கோடி ரூபாய் செலவில் சிறைவாசிகளுக்கு நூலகங்கள் மேம்பாடு அமைக்கப்பட்டுள்ளன. 2001 முதல் 2023 வரை 61,288 தீயணைப்பு அழைப்புகளும், 2,57,209 மீட்பு அழைப்புகளிலும் பணியாற்றி 4,224 மனித உயிர்களையும், 605 கோடி ரூபாய் மதிப்புள்ள உடமைகளையும் தமிழக தீயணைப்பு துறையினர் காப்பாற்றியுள்ளனர் என திமுக பொறுப்பேற்று செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…