சாலையில் சிதறி கிடந்த பல்கலைகழக விடைத்தாள்கள்! பின்னணி என்ன? போலீசார் விசாரணை!

சாலையில் சிதறி கிடந்த பல்கலைகழக விடைத்தாள்கள் குறித்து போலீசார் விசாரணை.
கரூர் மாவட்டம், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஆர்.புதுக்கோட்டை பகுதியில், வாகனம் ஒன்று வேகமாக கரூர் நோக்கி பயணித்தது. அப்போது, அந்த வாகனத்தில் இருந்து, பேப்பர் கட்டுகள் கீழே விழுந்த நிலையில், வாகனத்தில் இருந்தவர்கள் அதனை கண்டுகொள்ளாமல் சென்றனர். அந்த பேப்பரை எடுத்து பார்த்த போது, அந்த ,பேப்பர்கள் அனைத்தும், பல்கலைக்கழக தேர்வில் எழுதப்பட்ட, திருத்தப்படாத விடைத்தாள்கள் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து, மாயனூர் காவல்நிலையத்தில், பொதுமக்கள் புகார் அளித்தனர். போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், அந்த விடைத்தாள்கள் முகப்பில் சென்னை பல்கலைக்கழகம் என எழுதப்பட்டிருந்தால், இந்த விடைத்தாள்கள் சென்னையில் இருந்து வந்ததா? வாகனத்தில் இருந்து விழுந்ததா? வேண்டுமென்றே வீதியில் விட்டு செல்லப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025