திருச்சியில் சமயபுரம் டோல்கேட் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது.வழக்கம்போல இன்று காலை வங்கியை திறக்க சென்றபோது வங்கி சுவரில் துளையிட்டு 5 லாக்கர்கள் உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டதும் ஊழியா்கள் அதிா்ச்சி அடைந்தனா்.பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தொிவிக்கப்பட்டது. கேஸ் வெல்டிங் இயந்திரம், சிலிண்டர்களை பயன்படுத்தி முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் செய்துள்ளனர்.
இந்நிலையில் திருச்சி சமயபுரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட வங்கியில் டி.ஐ.ஜி. மற்றும் எஸ்.பி. விசாரணை நடத்தி வருகின்றனர்.கேஸ் வெல்டிங் இயந்திரம், சிலிண்டர்களை போலீசால் பறிமுதல் செய்யப்பட்டது.பின்னர் உடைக்கப்பட்ட லாக்கர்களின் எண்கள் விவரம் தெரிவிக்கப்பட்டது. அதில் 114, 299, 300, 39, 323 ஆகிய லாக்கர்களில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் காணாமல் போன நகைகள் மற்றும் கொள்ளை விவரங்களின் மொத்த மதிப்பு வெளியாகியுள்ளது.அதில் வங்கியில் காணாமல் போனதில் 520 சவரன் நகை மற்றும் 21 லட்சம் ரொக்கம் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 57 சவரன் மற்றும் 1 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.போலீசார் கைப்பற்றிய பணம் மாற்றும் நகைகளின் மொத்த மதிப்பு சுமார் 1 கோடி 50 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. போலீஸ் கைப்பற்றிய 57 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளை நடந்த வங்கி சாலையில் சிதறிக்கிடந்ததாக சொல்லப்படுகின்றது.
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2…
சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள்…
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…
சென்னை : வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…