Scam Alert: EB பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிப்பு – மின்வாரியம் எச்சரிக்கை!

Fake EB Bill

மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக குறுஞ்செய்தி வந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில், தமிழகத்தில் மின் கட்டணம் கட்டவில்லை என்றும் மின் இணைப்புத் துண்டிக்கப்படும் எனவும் குறுஞ்செய்தி அனுப்பி, அதில் லிங்கை க்ளிக் செய்ய வைத்து மக்களிடையே மோசடி செய்யும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற குறுஞ்செய்தி போலியானது என தமிழக மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மின்சார வாரியம் எச்சரிக்கையில், மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற குறுஞ்செய்தி வந்தால் பதட்டம் அடைய வேண்டாம். உங்களின் மின் கட்டணம் ரசீதின் நிலைப்பாடு சரி பார்க்க வேண்டும்.

உற்பத்தி மற்றும் சேவை துறையில் தமிழகம் உலக அளவில் சிறந்து விளங்கி வருகிறது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக குறுஞ்செய்தி வந்தால் குறுஞ்செய்தி வந்தால் கவனமாக இருக்க வேண்டும். குறுஞ்செய்தி வரும் எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம். இதுபோன்று, இணைய லிங்கக்கை கிளிக் செய்ய வேண்டாம். குறுஞ்செய்தி வந்தால் உடனடியாக 1930-ஐ அழைத்து புகார் அளிக்க வேண்டும். உறவினர்கள், நண்பர்களுக்கு தகவலை பகிர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்று ஒரு மோசடி மெசேஜ் பலருக்கும் அனுப்பப்பட்டு, அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து பணம் மோசடி செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். எனவே, மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக குறுஞ்செய்தி வந்தால்  http://cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும், @tncybercrimeoff என்ற எக்ஸ் பக்கத்திலும் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்