உதயநிதிக்கு எதிரான சனாதான வழக்கு.! மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

Tamilnadu Minister Udhayanidhi Stalin

உதயநிதிக்கு எதிரான சனாதன தர்மம் குறித்த வழக்கில் மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய “சனாதான ஒழிப்பு மாநாடு” எனும் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசுகையில் டெங்கு, மலேரியா போன்று சனாதானமும் ஒழிக்கப்பட வேண்டும் என பேசியிருந்தார்.

உதயநிதியின் இந்த பேச்சுக்கு இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புகள் எழுந்தன. மஹாராஷ்டிரா, உத்திர பிரதேசம், தமிழகம், கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் உதயநிதிதிக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன.

மேலும், மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசியதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஓய்வுபெற்ற நீதிபதிகள் உட்பட 262 பார் கவுன்சில் உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதி இருந்தனர். உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த கோரிக்கைகள் மீதான விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணை நடைபெற்று வருகிறது. அதில், உதயநிதிக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் பதியப்பட்ட புகார்கள் குறித்து அந்தந்த மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்