எஸ்.பி.பி.யின் உடல் பிஸியோதெரபி சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறது – மருத்துவமனை நிர்வாகம்
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து மருத்துவ நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஐ.சி.யுவில் இருக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்றும் தொடர்ந்து நினைவுடன் உள்ளார் என்று கூறியுள்ளது. எக்மோ, வென்டிலேட்டர் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எஸ்.பி.பி.யின் உடல் பிஸியோதெரபி சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.