எஸ்சி, எஸ்டி பிரிவினரை விட மிகக்குறைவான கட் ஆஃப் மதிப்பெண்கள்! விமர்சனத்திற்கு உள்ளான பொதுப்பிரிவினர்களின் இடஒதுக்கீடு விவகாரம்!
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாங்கி, இந்த வருட கிளார்க் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கனா முதல்நிலை தேர்வு ஜூன் 22,,23, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகி விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
இந்த முடிவுகளில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக கட் ஆஃப் மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டன. இதில் எஸ்சி, ஓபிசி, பொது பிரிவினருக்கு 61.25 எனவும், எஸ்டி பிரிவினருக்கு 53.75 எனவும், பொதுப்பிரிவில் நலிவடைந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 10 சதவீத ஐடா ஒதுக்கீட்டின் படி, 28.5 எனவும் கட் ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டன.
இந்த எஸ்டி பிரிவினரை விட பொது பிரிவில் நலிவடைந்தோர்க்கு மிக குறைவான கட் ஆஃப் மதிப்பெண் நிர்ணயம் செய்திருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.