எஸ்.பி.பி. உடலுக்கு ஒரே நேரத்தில் 150 பேர் அஞ்சலி செலுத்த ஏற்பாடு…. மாவட்ட எஸ்.பி தகவல்…
மறைந்த பின்னணி பாடகர் ,நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைக்கொண்டவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பூவுலகமே மெய்மறக்க வைக்கும் குரல் இன்று மவுனமாகி தன் பயணத்தை பூவுலகில் முடித்து விண்ணுலகம் சென்றது.
இந்நிலையில் அவரது உடல், நேற்று மாலை நுங்கம்பாக்கம் இல்லத்தில், பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்நிலையில் எஸ்.பி.பி.,யின் உடல், நேற்று இரவு, திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் உள்ள, அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.இன்று காலை, 11:௦௦ மணிக்கு, பண்ணை வீட்டின் ஒரு பகுதியில், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் எஸ்.பி.பி. உடலுக்கு ஒரே நேரத்தில் 150 பேர் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.அரவிந்தன் கூறியுள்ளார். எஸ்.பி.பி. உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட உள்ளது. 2 குண்டுகள் முழங்க காவல்துறை சார்பில் அரசு மரியாதை செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.