வசனம் பேசுவதும்,வாய் சவடால் விடுவதும் சீமானுக்கு ஒன்றும் புதிது அல்ல! – ராஜீவ் காந்தி

Default Image

வசனம் பேசுவதும்,வாய் சவடால் விடுவதும் சீமானுக்கு ஒன்றும் புதிது அல்ல என திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி விமர்சனம். 

சென்னை கலைவாணர் அரங்கில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்ட நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் கலந்து கொண்டார்.

Seeman reports

இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், பேனா சின்னம் நிறுவதை தடுத்து நிறுத்தும் வரை போராடுவேன். கடலுக்குள் பேனா சிலை வைத்தால் சுற்றுசூழல் பாதிக்கப்படும் என்றும் மெரினா கடலில் பேனா நினைவு சின்னத்தை வைத்தால் உடைப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகத்தினை என் உயிரை கொடுத்தாலும் தடுத்து கடல் வளம் காப்பேன் என 2021-ல் பேசிய சீமான் இப்ப ஏன் பேசுவது,போராடுவது இல்லை? பல லட்சம் ரூபாய் கமிசன் வாங்கி கொண்டு அமைதியானார்! வசனம் பேசுவதும்,வாய் சவடால் விடுவதும் சீமானுக்கு ஒன்றும் புதிது அல்ல!’ என விமர்சித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்