Savukku Shankar in Covai Hospital [File Image]
சென்னை : கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன் என யூ-டியூபர் சவுக்கு சங்கர் கோவை மருத்துவமனையில் முழக்கம் எழுப்பினார்.
பெண் காவலர்களுக்கு எதிராக தவறாக பேசியதாக கூறி யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் (மே 4) தேனி அருகே கைது செய்தனர். கைது செய்து கோவைக்கு அழைத்து வந்த போது அவர் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியதில் சவுக்கு சங்கர் கையில் அடிபட்டதாக கூறப்பட்டது.
அதன் பிறகு கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது கோவை சிறையில் இருக்கும் சவுக்கு சங்கர் மீது, திருச்சி, சேலம், சென்னை உள்ளிட்ட காவல் நிலையங்களிலும் வழக்குகள் பதியட்டன. சென்னையில் ஏற்கனவே 2 வழக்குக்கள் நிலுவையில் இருந்ததால், அவர் கடந்த 8ஆம் தேதி சென்னை காவல்துறையால் கைது செய்யப்பட்டு, 10ஆம் தேதி சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதன் பின்னர் சவுக்கு சங்கர் மீண்டும் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் . மேலும், சவுக்கு சங்கரை கைது செய்கையில் அவர் கஞ்சா போதை பொருள் வைத்து இருந்தாக கூடுதல் வழக்கு பதியப்பட்டு, சென்னையில் உள்ள அவரது வீடு அலுவலகம் சோதனை செய்யப்பட்டது. இந்த வழக்குகளுக்கான விசாரணைகளை தொடர்ந்து, காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் , சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், வலது கையில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்த சவுக்கு சங்கரை இன்று இரண்டாம் முறையாக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது, பத்திரிகையாளர்களை பார்த்தவுடன் சவுக்கு சங்கர், தன் கையை உடைத்தது கோவை சிறை கண்காணிப்பாளர் என்றும், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதகவும், தான் கோவை சிறையில் கொல்லப்படுவேன் என்றும் ஆவேசமாக கூறிக்கொண்டே காவல்த்துறை பாதுகாப்பில் சென்றார்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…