சவுக்கு சங்கரியின் மனு தள்ளுபடி!
சிறைத்துறைக்கு உத்தரவிடக் கோரி சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு:
கடந்தாண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகிய பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது உயர்நீதிமன்றம் கிளை. இதனை தொடர்ந்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த நவம்பர் மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சிறை கைதிகளுக்கு புத்தகங்கள்:
இந்த நிலையில், கடலூர் சிறையில் உள்ள கைதிகளுக்கு புத்தகங்கள் வழங்குவதற்கு அனுமதிக்கக்கோரி சவுக்கு சங்கர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவில், ரூ.15,000 மதிப்புள்ள 76 புத்தகங்களை இலவசமாக வழங்க முடிவு செய்து, அதனை பெற்றுக்கொள்ளுமாறு சிறைத்துறை டிஜிபிக்கு கடிதம் எழுதினேன்.
ஐகோர்ட்டில் மனு:
ஆனால் அரசியல் காரணங்களால் தமது புத்தகங்களை ஏற்றுக்கொள்ள சிறைத்துறை மறுத்து விட்டதாகவும், இதனால் தமது புத்தகங்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென சிறைத்துறை டிஜிபிக்கு உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் அமர்வு முன்பு நடைபெற்றது.
சவுக்கு சங்கர் மனு தள்ளுபடி:
அப்போது, கடலூர் சிறை கைதிகளுக்கு புத்தகம் வழங்க அனுமதிக்கக் கோரி சவுக்கு சங்கர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். கைதிகளில் வாழ்க்கைக்கு இந்த புத்தகங்கள் உதவும் என எவ்வாறு கூறுகிறீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். விளம்பர நோக்கத்திற்கு மனுதாக்கல் செய்யும் முன் புத்தகங்கள் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.