#BREAKING: சவுக்கு சங்கர் வழக்கு – சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Default Image

அடுத்த விசாரணை வரை சவுக்கு சங்கர் எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் நிபந்தனை.

கடந்த ஜூலை 22-ம் தேதி, ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்திருக்கிறது என்று ஒரு யூடியூப் சேனலில் சவுக்கு சங்கர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து சவுக்கு சங்கர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்து சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது.

நீதித்துறை பற்றி அவதூறாக பேசியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கர் கடலூர் சிறையில் உள்ளார். இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு எதிராக சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில், யூடியூபர் சவுக்கு சங்கர் வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த இடை காலத்தில் இந்த வழக்கு தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் சவுக்கு சங்கர் தெரிவிக்க கூடாது என்று நிபந்தனை விதித்து சிறை தண்டனைக்கு எதிராக சவுக்கு சங்கர் தொடர்ந்த மனு அடுத்தாண்டு ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனிடையே, இவ்வழக்கு விசாரணையின்போது, எங்கள் மீது விமர்சனங்களை வைக்க வேண்டாம் என நாங்கள் சொல்லவில்லை ஆனால் அதற்கென்று ஒரு வரைமுறை வேண்டும் என்று தான் சொல்கிறோம். எந்த ஆதாரங்களும் இல்லாமல் நீதித்துறை மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை சவுக்கு சங்கர் எப்படி வைத்தார் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்