கட்சியைக் கைப்பற்றுவதை விட காப்பாற்றுவதே முக்கியம் – ஓபிஎஸ் அறிக்கை!

Published by
அகில் R

ஓபிஎஸ்: நடைபெற போகும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மனுத்தாக்களை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியான நிலையில் அதில் தமிழக மக்களவை தொகுதிகளில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 39 தமிழக மக்களவை தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தது. அதே நேரத்தில் மற்றொரு முனையில் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எல்லாம் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் 3-வது இடம், 2-வது இடம் பிடித்து தோல்வியைச் சந்தித்தது.

அதே சமயம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் திமுக எம்.எல்.ஏ வான புகழேந்தி மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு அந்த விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை-10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று (ஜூன்-14) விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இந்நிலையில், இன்று காலை ஓ.பன்னீர்செல்வம் தனது எஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில், “மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கம் பிளவுற்று உள்ளது.

இதனால், நடைபெற இருக்கின்ற விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலை எதிர்கொண்டு, 11-வது தொடர் தோல்வியை வரவு வைத்துக் கொள்வதா? இல்லை 2019-ல் இதே விக்கிரவாண்டி தொகுதியில் நாம் ஈட்டிய அன்றைய அதே இடைத் தேர்தல் வெற்றியை மீண்டும் நிலைநாட்டி கழகத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து வரப் போகிறோமா? என்கிற ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் ததும்பி நிற்கிறது.

எனவே, கட்சி ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து போகுமோ என சுயநலத்தோடு சிந்திக்காமல் கட்சியைக் கைப்பற்றி கொள்வதினும் கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என்கிற பெருந்தன்மையிலான முடிவினை அனைவரும் கூடி எடுக்க வேண்டும்” என அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

டாக்டர் இல்லை., சிகிச்சை இல்லை.! விக்னேஷ் உயிரிழந்து விட்டான்.! கதறி அழும் அண்ணன்.!

சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…

1 min ago

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…

2 hours ago

இலங்கையில் சாதனை படைத்த NPP.! தனி பெரும்பான்மை நிரூபித்த புதிய அதிபர்.!

கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…

2 hours ago

Live : இலங்கை அதிபர் தேர்தல் முதல்., செந்தில் பாலாஜி மீதான ஊழல் புகார் வரையில்…

சென்னை : நடைபெற்ற இலங்கை  புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர்  அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…

2 hours ago

ரூ.397 கோடி ஊழல்? செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் பரபரப்பு புகார்!

சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…

3 hours ago

நியூஸிலாந்து பார்லிமென்ட்டில் நடனம் ஆடி எதிர்ப்பைத் தெரிவித்த பெண் எம்.பி! வைரலாகும் வீடியோ!

வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…

4 hours ago