புகைப்படக் கலைஞர்களின் குடும்பத்தை காப்பாற்றுங்கள் – கேப்டன் கோரிக்கை.!

மூன்று லட்சம் புகைப்படக் கலைஞர்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கேப்டன் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு 3 கட்டமாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இந்த ஊரடங்கால் அனைத்து தரப்பு மக்களும், தொழில்களும் பாதிக்கப்பட்டிருந்தாலும், தமிழக அரசு நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கியது, ஆனால் தமிழகம் முழுவதும் உள்ள 3 லட்சம் புகைப்படக் கலைஞர்கள் இருந்தும் நலவாரியத்தில் அவர்கள் உறுப்பினராக இல்லை.
இதனால் அவர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்க்க முன்பு கோரிக்கை வைத்தும், அரசு அதில் ஆர்வம் காட்டவில்லை. நல வாரியத்தில் உறுப்பினர்களாக இல்லாத பல தொழில்களை சேர்ந்த அனைவருக்குமே தமிழக அரசு உரிய சலுகையை வழங்கி, அவர்களுடைய தொழில்கள் நலிவடையாமல் இருக்கவும், தொழில் தொடங்க கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும். இந்த சூழ்நிலையில், நலவாரிய உறுப்பினர்களுக்கு கிடைத்த அரசின் உதவியும் இவர்களுக்கு கிடைக்கவில்லை.
ஊரடங்கு உத்தரவால் கடந்த 49 நாட்களுக்கும் மேலாக திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள், ஆன்மீக வழிபாடுகள், கோவில் கும்பாபிஷேகங்கள், அரசியல் கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட ஏதும் நடைபெறுவதால் வருமானம் இல்லாமல் அவர்களின் குடும்பம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இவர்களின் வறுமையை கருத்தில் கொண்டு உதவித்தொகை வழங்கிடவும் நலவாரியத்தில் உறுப்பினர்களாக்கவும், தொழில் தொடங்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகம் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024