கஜா புயல் 4 மாவட்ட மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டுள்ளது.மக்கள் தங்கள் அடிப்படை தேவை பொருட்கள் இன்றி தவித்து வருகின்றனர்.இந்த புயலில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டம் நாகை அம்மாவட்டமே தனி தீவாக காட்சியளிக்கிறது. இன்னும் அம்மாட்டத்தில் பல கிராமங்கள் தனித்து விடப்பட்டுள்ள தீவாக மாறியுள்ளது.அங்குள்ள மக்கள் எப்படி,இருக்கிறார்கள் என்ற கேள்வியே கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில் அங்கு சென்று மக்களுக்கு ஆறுதல் சொல்ல யாரும் வரவில்லை என்பதே அவர்களின் கோவமாக உள்ளார்கள்.நாங்க எப்படி இருக்கோம்னு கூட யாரும் பார்க்க வரவில்லையே என்பது தான் அங்கிருந்து வரும் நெஞ்சை கரைக்கும் குரல் இந்நிலையில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டார்.
இதற்கு பின் செய்தியார்கள் சந்திப்பில் பேசிய சகாயம் ஊருக்கே சோறு போட்டவர்கள் டெல்டா மக்கள் இன்று பட்டினியால் வாழ்கின்றனர் என்பதை பார்க்கும் போதே மிகுந்த வேதனையாக உள்ளது.
இவ்வாறு தெரிவித்த அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில் அரசு மட்டுமல்லாமல் நாம் அனைவரும் தனிப்பட்ட முறையில் உதவ முன்வர வேண்டும் என கோரிக்கையோடு சேர்ந்த வேண்டுகோள் விடுத்தார் மேலும்மக்கள் பாதை இயக்கம் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் பொருட்டாக ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
சகாயம் என்றலே நேர்மைதான் மேலும் கலாமுக்கு பின் இளைஞர்கள் விரும்பும் ஒரு மனிதராக திகழ்பவர் சகாயம் ஐ.ஏ.எஸ்
DINASUVADU
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…