அவரவர் தொகுதி மக்களை கொரோனாவிலிருந்து காப்பதை முழுமுதற் கடமையாகக் கருதி செயலாற்றும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என கமல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த 7ஆம் தேதி ஆளுநர் முன்னிலையில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில்,16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.
இந்த முதல் கூட்டத்தொடரில் தேர்தலில் வெற்றிபெற்ற 234 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொள்கின்றனர். இவர்களுக்கு பதவியேற்று வைக்க தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதை தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அகர வரிசைப்படி பதவியேற்ற வருகின்றனர்.
இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டரில் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவி ஏற்றுக் கொள்ளும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரவர் தொகுதி மக்களை கொரோனாவிலிருந்து காப்பதை முழுமுதற் கடமையாகக் கருதி செயலாற்றும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…
பெங்களூர் : இந்த சீசன் ஐபிஎல் தொடரில் பெங்களுர் அணி சிறப்பாக தங்களுடைய விளையாட்டை வெற்றிமூலம் ஆரம்பித்து இப்போது கொஞ்சம்…
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…