சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல – சபாநாயகர் அப்பாவு

speaker appavu

நடப்பாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்று, அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காமல் புறக்கணித்தார். சென்ற ஆண்டு உரையின்போது சில வார்த்தைகளை புறக்கணித்த நிலையில், இம்முறை அரசின் உரையை முழுமையாக படிக்காமல் ஓரிரு நிமிடத்தில் முடித்துவிட்டு வெளியேறினார்.

இதன்பின் அரசு தயாரித்த உரையை சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் வாசித்தார். அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அயராத உழைப்பால் அனைத்து துறைகளில் தமிழ்நாடு அரசு முன்னேறி வருகிறது. 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழ்நாடு அரசு ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டின் பண வீக்கம் 5.97ஆக உள்ளது. தமிழ்நாடு அரசு பணவீக்கத்தை கட்டுப்படுவதில் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு அணி 2ம் இடம் பிடித்துள்ளது. கணியன் பூங்குன்றனார், வரிகளான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ வரிகள் தான் தமிழ்நாடு அரசை வழிநடத்துகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது. மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரி கணக்கெடுப்பாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு சட்டப்பேரவை.. உரையை புறக்கணித்தார் ஆளுநர்!

நதி நீர் பங்கீடு பிரச்னையில் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு துணை நிற்கும். தமிழ்நாடு மீனவர்களின் நலன் மற்றும் சிறை பிடிக்கபடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு வலியுறுத்துவோம் என்றும் தமிழ்நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் தமிழ்நாடு செயலாற்றி வருகிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு தயார் செய்துள்ள உரையில், அரசின் திட்டங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தது.

இதன்பின் சபாநாயகர் கூறியதாவது, தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து, நிறைவில் தேசிய கீதம் இதுதான் மரபு. சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய குறிப்புகள் அவைக் குறிப்பில் இடம்பெறாது. சாவர்க்கர் , கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்றார். மேலும், ஆளுநர் உரையை படிக்காமல் புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்