6 தொகுதிகள் காலி…அனைத்து கட்சிகளோடு இன்று தேர்தல் அதிகாரி முக்கிய ஆலோசனை

Published by
Kaliraj

தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு  அனைத்து கட்சிகளோடு தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இந்திய தேர்தல் ஆணையம் நவ.,16ந்தேதிக்குள் தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட  உத்தரவிட்டது இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் திருத்தம்,பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் போன்றவைகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுவதுடன் மற்றும்  சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் தேதியில் இருந்து டிச.,15ந்தேதிக்குள்ளான காலக்கட்டத்தில் விண்ணப்பங்கள் பெறப்படும்.

அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் வரும் ஜன.,5ந்தேதிக்குள் இறுதி செய்யப்பட்டு ஜன.,20ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்னதாக அனைத்து கட்சி கூட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துவது வழக்கம். வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் பற்றி ஆலோசனைகளை அரசியல் கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் கருத்து கேட்கும்.
இந்நிலையில் அவ்வாறு அங்கீகரிக்கட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று  காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம், இரட்டை பெயர் பதிவுகள் நீக்கம், வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேவையான வசதிகள் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் தமிழகத்தில் 6 தொகுதிகள் காலியாக உள்ளதால் இது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published by
Kaliraj

Recent Posts

வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிக கனமழை வாய்ப்பு!

வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிக கனமழை வாய்ப்பு!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…

6 minutes ago

“முறைகேடான விதத்தில் பாஜக கூட்டணி வெற்றி”! விளக்கம் கேட்கும் திருமாவளவன்!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…

21 minutes ago

IPL Auction : களைகட்டப் போகும் சவுதி..! இன்று தொடங்கும் ஐபிஎல் ஏலம்..!

சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…

32 minutes ago

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

16 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

17 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

17 hours ago