வாக்களிக்க பூத் சிலிப் கட்டாயம் தேவையா? – சத்யபிரத சாகு விளக்கம்

booth slip

Election2024: வாக்களிக்க பூத் சிலிப் கட்டாயம் தேவையா என்பது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம்.

நாட்டின் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை தேர்தல் நாளை முதல் கட்டமாக தொடங்குகிறது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கும் நாளை ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்வு பெற்றது.

இதனால் பிரச்சாரம் நிறைவுக்கு பிறகு பின்பற்றவேண்டிய தேர்தல் விதிமுறைகளும் அமலுக்கு வந்தது. அதன்படி, நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர் அடைய அட்டை இல்லாதவர்கள் பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இதனிடையே மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக முழுவதும் வாக்காளர்களுக்கு பூத் சிலிப்பும் விநியோகம் செய்ய்யப்பட்டது. இருப்பினும் சில பகுதிகளில் பூத் சிலிப் வழங்கவில்லை என புகாரும் எழுந்தது. இதனால் பூத் சிலிப் இல்லையென்றால் வாக்களிக்க முடியுமா? என்று மக்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் வாக்களிக்க பூத் சிலிப் கட்டாயம் தேவையா? என்பது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் அதிகாரி கூறியதாவது, தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 90% பூத் சிலிப் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் சில பகுதிகளில் வீட்டில் யாரும் இல்லாததால் பூத் சிலிப் வழங்கப்பட்டிருக்காது. இதனால் பூத் சிலிப் இல்லாததால் வாக்களிக்க முடியாது என நினைக்கவேண்டாம். தேர்தல் ஆணையத்தின் voter helpline என்ற மொபைல் செயலி மூலம் பூத் சிலிப்பை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அந்த செயலில் உள்ளே சென்று உங்களது வோட்டர் ஐடி கார்டு நம்பர் பதிவிட்டு பூத் தொடர்பான விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

எனவே பூத் சிலிப் என்பது கட்டாயம் இல்லை. அதிகாரப்பூர்வ 13 அடைய அட்டைகளில் எதாவது ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்றும் பூத் சிலிப் இல்லையென்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் எனவும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கமளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்