Satyabrata Sahoo: தமிழகத்தில் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டியளித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் சமீபத்தில் தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று விறுவிறுப்பாக தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் 6.23 கோடி வாக்காளர்கள் மக்களவை தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியலின் படி தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் என 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், மூன்றாம் பாலினத்தவர்கள் 8,465 பேர் அடங்குவர். கடந்த 2 மாதங்களில் மட்டும் 5 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்துள்ளனர்.
80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 6.13 லட்சம் பேர் தபால் மூலம் வாக்களிக்கலாம். இதுவரை 68,144 வாக்கு மையங்கள் இருக்கும் சூழலில், தற்போது கூடுதலாக 177 வாக்குச்சாவடிகளை அமைக்கத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் 7 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். தேர்தல் அலுவலர்களுக்கு ஏப்ரல் 7ம் தேதிக்குள் 2ம் கட்ட பயிற்சி அளிக்கப்படும்.
தமிழ்நாட்டில் 117 தேர்தல் பார்வையாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். அதன்படி, 39 பொது பார்வையாளர்கள், 20 காவல் பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 191 கம்பெனிகளை சேர்ந்த மத்திய பாதுகாப்பு படை தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு இதுவரை சுமார் ரூ.70 கோடி மதிப்புள்ள பணம், தங்கம் மற்றும் மதுபானம் உள்ளிட்ட பிற பொருட்கள் தேர்தல் பறக்கும் படை மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் விதிமீறல் பற்றி புகார் அளிப்பவர்கள் தங்கள் விவரத்தை மறைத்துவிட்டு புகார் அளிக்கலாம் என தெரிவித்தார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…