அரசு ஊழியர்களுக்கு சனிக்கிழமை பணிநாள் ரத்து.!
முதற்கட்ட கொரோனா ஊரடங்கில் அரசு அலுவலகங்களில் அத்தியாவசிய பணிகளையுடைய அலுவலகங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அதனையடுத்து, சனிக்கிழமையையும் சேர்த்து வாரத்தின் ஆறு நாட்களை பணி நாளாக அறிவித்து 50 சதவீத ஊழியர்களை கொண்டு பணி நடத்த கடந்த மே 15ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. அதனையடுத்து, விதிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வால் சனிக்கிழமை பணிநாள் என்பதுடன் 100 சதவீத ஊழியர்களை பணியில் அமர்த்த அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது வார்த்தின் 6 நாள் பணி என்பதை வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் 5 நாளாக மாற்றியும், தற்போதுள்ள அலுவலக நேரத்தில் 100 சதவீத ஊழியர்களை கொண்டு பணியை நடத்தவும் ஆணை பிறப்பித்துள்ளதாக தலைமை செயலர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.